கொரிய தொழிலுக்கு செல்லமுடியாதுள்ளதாக குற்றச்சாட்டு

பரீட்சையில் சித்தியடைந்தும் தொழிலுக்கு செல்லமுடியாதுள்ளதாக குற்றச்சாட்டு

by Staff Writer 11-06-2021 | 11:22 AM
Colombo (News 1st) கொரியாவில் வேலை வாய்ப்பை பெறுவதற்காக நடத்தப்படும் பரீட்சையில் சித்தியடைந்து ஒரு வருடம் கடந்துள்ள போதிலும், தொழில் வாய்ப்பிற்காக அந்நாட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இளைஞர், யுவதிகள் தெரிவிக்கின்றனர். 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற குறித்த பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த வருடம் வௌியிடப்பட்டதுடன் 5,000 பேர் பரீட்சையில் சித்தியடைந்திருந்தனர். இதனடிப்படையில், கொரியாவில் தொழிலுக்காக செல்வதற்கு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், கொரோனா நிலைமையினால் தொழில் வாய்ப்பிற்காக கொரியாவிற்கு அனுப்புவதில் தாமதங்கள் நிலவுவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.