பயணத் தடை 21 ஆம் திகதி வரை நீடிப்பு

பயணத் தடை 21 ஆம் திகதி வரை நீடிப்பு

பயணத் தடை 21 ஆம் திகதி வரை நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2021 | 5:32 pm

Colombo (News 1st) தற்போது அமுலிலுள்ள பயணத் தடை, எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதற்கமைய, எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 04 மணிக்கு பயணத் தடை நீக்கப்படாது என இராணுவத் தளபதி கூறினார்.

பயணத் தடை நீடிக்கப்பட்டாலும் ஆடை கைத்தொழில், நிர்மாணப் பணிகள், அத்தியாவசிய சேவைகள் என்பன வழமைபோன்று முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

பொருளாதார மத்திய நிலையங்களும் அறிவிக்கப்பட்டுள்ள திகதிகளில் திறக்கப்படும் என இராணுவத் தளபதி தெரிவித்தார்.

விவசாய நடவடிக்கைகள், சேதனப்பசளை உற்பத்தி ஆகியனவும் வழமைபோன்று முன்னெடுக்கப்படும் என அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்