தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் சுகாதார ஊழியர்கள்

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் சுகாதார ஊழியர்கள்

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் சுகாதார ஊழியர்கள்

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2021 | 8:45 am

Colombo (News 1st) பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று (11) முற்பகல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் 26 தொழிற்சங்க உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

இதற்கு இணையாக நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எனினும் கொரோனா நிலைமையை கருத்திற் கொண்டு, தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது எனவும் அரச தாதியர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவிடம் நாம் வினவியபோது, குறித்த சங்கங்களுடன் இந்த விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் இதுவரை இணக்கம் எட்டப்படவில்லை என அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்