தெற்காசியாவின் பாரிய சிறுநீரக வைத்தியசாலை பொலன்னறுவையில் திறந்துவைப்பு

தெற்காசியாவின் பாரிய சிறுநீரக வைத்தியசாலை பொலன்னறுவையில் திறந்துவைப்பு

தெற்காசியாவின் பாரிய சிறுநீரக வைத்தியசாலை பொலன்னறுவையில் திறந்துவைப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2021 | 1:12 pm

Colombo (News 1st) பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்ட தெற்காசியாவின் பாரிய சிறுநீரக வைத்தியசாலையான தேசிய சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவமனை இன்று (11)  திறந்துவைக்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கைக்கான சீனத் தூதுவர் உள்ளிட்ட பிரமுகர்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

2015 ஆம் ஆண்டு சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டிந்த அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த வேண்டுகோளுக்கு அமைய சீன அரசாங்கத்தினால் இந்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டது.

இந்த வைத்தியசாலையில் 200 கட்டில்களும் இரத்த மாற்று சிகிச்சைகளுக்காக 100 கட்டில்களும் சிறுநீரகம் பொருத்தும் சத்திர சிகிச்சை கூடமும் 2 தீவிர சிகிச்சைப் பிரிவுகளும் உள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்