ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த யானை உயிரிழப்பு

ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த யானை உயிரிழப்பு

ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த யானை உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2021 | 4:04 pm

Colombo (News 1st) வவுனியா – கனகராயன்குளம், புத்தூர் காட்டுப் பகுதியில் காயமடைந்த நிலையில், ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த யானை உயிரிழந்துள்ளது.

வவுனியா நகரிலிருந்து சுமார் 25 கிலோமீற்றர் தூரத்திலுள்ள புத்தூர் காட்டுப் பகுதியில் காயங்களுக்குள்ளான தந்தமுள்ள யானை, ஒரு மாதத்திற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த யானையின் கால் பகுதியில் காயங்கள் காணப்பட்டதுடன், தொடர்ச்சியாக சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

வவுனியா வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கிளிநொச்சி, அநுராதபுரம் கால்நடை வைத்திய அதிகாரிகள் இணைந்து யானைக்கு சிகிச்சையளித்து வந்தனர்.

எனினும், சிகிச்சை பலனின்றி யானை இன்று (11) உயிரிழந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்