67 கொரோனா மரணங்கள் பதிவாகிய பிரதேசங்கள்

67 கொரோனா மரணங்கள் பதிவாகிய பிரதேசங்கள்

67 கொரோனா மரணங்கள் பதிவாகிய பிரதேசங்கள்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

10 Jun, 2021 | 10:17 am

Colombo (News 1st) நாட்டில் முதல்தடவையாக 60 இற்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் நேற்றைய தினம் (09) உறுதிப்படுத்தப்பட்டன.

43 ஆண்களும் 24 பெண்களும் அடங்கலாக நேற்று 67 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டன.

கொழும்பு – 15, வத்தளை, வெல்லம்பிட்டி, அவிசாவளை, நீர்கொழும்பு, வாழைச்சேனை, கொழும்பு 14, கொட்டாஞ்சேனை, துலங்கடவல, மீகம, வெலிசறை, பண்டாரகம, காலி, பூஜாபிட்டிய, கம்பளை, அம்பேபுஸ்ஸ, தெனியதய, பொகவந்தலாவ, பரகடுவ, தெடிகமுவ, வெல்லவாய, ஹெம்மாத்தகம, கனேமுல்லை, கோனவல, ஏக்கல, பரந்தன், கரந்தெனிய, மொறட்டுவை, வாத்துவ, மடபாத்த, அலுபொமுல்ல, பிலியந்தலை, மாத்தளை, ஏறாவூர், வத்தேகம, பலாங்கொடை, களனி, ஹோமாகம, கட்டுனேரிய, கம்பஹா, புசல்லாவை, வெலம்பட, கெங்கல்ல, கட்டுகஸ்தோட்டை, கண்டி, கொழும்பு – 07, நுவரெலியா, கலகெதர, களுத்துறை, கொழும்பு – 10, அம்பாறை, மாத்தறை, மாரவில, களுத்துறை தெற்கு, தெஹிவளை மற்றும் கின்தோட்டை ஆகிய பிரதேசங்களிலேயே குறித்த கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

கொரோனா மரணங்களில் இருவர் 20 முதல் 29 வயதுக்கு உட்பட்டோர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா மரணங்களுடன் நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,910 ஆக அதிகரித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்