கொவிட்19 ஒழிப்பில் கைகோர்க்கும் யூனியன் அஷ்யூரன்ஸ்

கொவிட்-19 விழிப்புணர்வில் சுகாதார மேம்பாட்டு பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் கைகோர்ப்பு

by Staff Writer 10-06-2021 | 4:22 PM
கொவிட்-19 தொற்றுப் பரவலிலிருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சுகாதார மேம்பாட்டு பணியத்துடன் அரச, தனியார் பங்காண்மையை யூனியன் அஷ்யூரன்ஸ் ஏற்படுத்தியிருந்தது. முகக்கவசங்களை பயன்படுத்துவது, பயன்படுத்திய பின்னர் கழற்றிவைப்பது மற்றும் பாவித்த பின் கழிவகற்றுவது தொடர்பில் பெருமளவானோர் அறிந்திராத வழிகாட்டல்கள் தொடர்பிலும், பொதுவான சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையிலும் டிஜிட்டல் ஊடகங்களினூடாக அமைந்த விழிப்புணர்வுத் திட்டத்தை முன்னெடுக்க முன்வந்திருந்தன. சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் பி.டி.கொக்கலகே கருத்து தெரிவிக்கையில், “2021 ஏப்ரல் மாத பிற்பகுதியிலும் மே மாத முற்பகுதியிலும் பெருமளவு அதிகரித்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை கவனத்தில் கொள்ளும் போது பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வுத் திட்டமொன்றை முன்னெடுப்பது முக்கியத்துவம் பெறுகின்றது. சமூக சேவைத் திட்டமாக, பொது மக்கள் மத்தியில் தவிர்ப்பு நடத்தைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கட்டமைப்பொன்றை யூனியன் அஷ்யூரன்ஸுடன் இணைந்து ஏற்படுத்தியிருந்தோம்” என்றார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் வைத்தியர் நயனி தர்மகீர்த்தி கருத்து தெரிவிக்கையில், “தனிநபர்கள் பின்பற்றும் சுகாதார மற்றும் பிரத்தியேக ஒழுக்க முறைகளினூடாக தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை நாம் அவதானித்துள்ளோம். விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு தொடர்பாடல் என்பது முக்கியமானதாக அமைந்திருப்பதுடன், மிகவும் அவசியமான சிறந்த சுகாதார பழக்கங்களை பின்பற்றுவதற்கு வழிகோலுவதாக அமைந்துள்ளது. யூனியன் அஷ்யூரன்ஸ் உடன் இணைந்து இந்த விழிப்புணர்வுத் திட்டத்தை முன்னெடுப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைவதுடன், நாட்டின் சகல பாகங்களுக்கும் இந்தத் தகவல் சென்றடைவதை உறுதி செய்கின்றோம்” என்றார். வீடியோ தொடரினூடாக, முகக்கவசங்களைப் பயன்படுத்தும் போது பாதுகாப்பை உயர்வடைவது தொடர்பான பயனுள்ள குறிப்புகள் வழங்கப்படுவதுடன் பயன்படுத்திய முகக்கவசங்களை கழற்றிய பின்னர் வைப்பது மற்றும் பயன்படுத்திய பின்னர் கழிவகற்றுவது தொடர்பான குறைந்தளவு விழிப்புணர்வு காணப்படும் விடயங்கள் தொடர்பிலும் குறிப்புகள் வழங்கப்படுகின்றன. முகக்கவசங்களை பயன்படுத்துவதன் பிரதான இலக்கு பாதுகாப்பை பேணுவது என்பதுடன், முறையற்ற வகையில் முகக்கவசங்களை கழிவகற்றுவதால் ஏற்படும் சூழல் பாதிப்புகள், பயன்படுத்தும் வேளையில் முகக்கவசங்களை முறையாக பேணாவிடின் ஏற்படும் சுகாதார இடர்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்து தெரிவிக்கையில், “தொற்றுப் பரவல் காரணமாக எழுந்த நெருக்கடியான நிலை காரணமாக விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஆதரவை வழங்க வேண்டியதன் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டுள்ளது. மக்கள், செயற்பாடுகள் மற்றும் வியாபாரங்களுக்கு ஏற்படும் தாக்கத்தை குறைத்துக் கொள்வதற்கு இந்த கைகோர்ப்பு முக்கியமானதாகும். இந்த முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைக்காக இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியத்துடன் கைகோர்ப்பதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம்” என்றார். சமூக வலைத்தளங்களினூடாக பிரச்சாரம் செய்யப்பட்ட இந்தத் திட்டத்தினூடாக, “முகக்கவசம் அணியுங்கள், உயிரொன்றைக் காப்பாற்றுங்கள்” (Wear A Mask, Save A Life) எனும் தொனிப் பொருளில் பொதுமக்கள் மத்தியில் முகக்கவசம் ஒன்றை அணிய வேண்டியதன் முக்கியத்துவம் நினைவூட்டப்பட்டிருந்தது. 3 வார காலப்பகுதியில் இலங்கையின் மூன்று மில்லியன் மக்களுக்கு இந்த தகவல் சென்றடைந்திருந்தது. இந்த ஆண்டின் முற்பகுதியில் தொற்றுப் பரவல் காரணமாக எழுந்திருந்த உளவியல் சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டத்தின் நீடிப்பாக இந்த கைகோர்ப்புத் திட்டம் அமைந்திருந்தது. கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன், சந்தை மூலதனவாக்கமாக ரூ. 18.2 பில்லியனைத் தன்வசம் கொண்டுள்ளதுடன், ஆயுள் நிதியமாக ரூ. 43.8 பில்லியனையும் கொண்டுள்ளது. 2021 மார்ச் மாதத்தில் மூலதன போதுமை விகிதம் (CAR) 326% ஆகவும் காணப்பட்டது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. 76 கிளைகளைக் கொண்டுள்ளதுடன், 3000 இற்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு யூனியன் அஷ்யூரன்ஸ் இயங்குவதுடன், தொடர்ச்சியாக ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகளில் முதலீடுகளை மேற்கொண்டு, ஆயுள் காப்புறுதித் துறையில் எழும் மாற்றங்களுக்கேற்ப பணியாற்றிய வண்ணமுள்ளது. பட விளக்கம்: சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர். பி.டி.கொக்கலகே, சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் வைத்தியர். நயனி தர்மகீர்த்தி, யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ்...