பிட்காயினை சட்டப்பூர்வ நாணயமாக்கியது எல் சல்வடோர்

பிட்காயினை சட்டப்பூர்வ நாணயமாக அங்கீகரித்தது எல் சல்வடோர்

by Bella Dalima 10-06-2021 | 7:30 PM
Colombo (News 1st)  பிட்காயினை (Bitcoin) பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சட்டப்பூா்வ நாணயமாக மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடோர் அங்கீகரித்துள்ளது. இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ள முதல் நாடு எல் சல்வடோர் என்பது குறிப்பிடத்தக்கது. எல் சல்வடோரின் பொருளாதாரம், அந்த நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றும் தொழிலாளா்கள் அனுப்பும் பணத்தை சார்ந்துள்ளது. இந்த நிலையில், நாட்டின் அபிவிருத்திக்கு டிஜிட்டல்  நாணயங்கள் உதவும் என்று அதிபர் நயீப் புகேலே கூறியுள்ளார். இந்த சூழலில், பிட்காயினை சட்டப்பூா்வ நாணயமாக அங்கீகரிக்கும் சட்டமூலத்தை அவர் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து, அதற்கான பெரும்பான்மை அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார். இதையடுத்து, எல் சல்வடோரில் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய சட்டப்பூர்வ நாணயமாக பிட்காயின் அங்கீகாரம் பெற்றுள்ளது. இத்தகைய அங்கீகாரத்தை பிட்காயின் பெற்றமை இதுவே முதன்முறையாகும்.