வவுனியாவில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் மீது தாக்குதல்

வவுனியாவில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் மீது தாக்குதல்

வவுனியாவில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் மீது தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

10 Jun, 2021 | 1:27 pm

Colombo (News 1st) வவுனியா – சாந்தசோலை பகுதியில் பொது சுகாதார பரிசோதகர் (PHI) மீது இளைஞர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முகக்கவசம் அணியாது சைக்கிளில் பயணித்த இளைஞரிடம், முகக்கவசத்தை அணியுமாறு பொது சுகாதார பரிசோதகர் அறிவித்த போது, தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

தாக்குதலுக்கு இலக்கான பொது சுகாதார பரிசோதகர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாந்தசோலை பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவரே, பொது சுகாதார பரிசோதகரை தாக்கியதாக பொலிஸார் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்