English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
10 Jun, 2021 | 10:58 pm
Colombo (News 1st) அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்ற செலன்திவ முதலீட்டுத் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் – கீரிமலையில் மக்களின் நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை கூறுவிலை கோரல் மூலம் வெளியாருக்கு வழங்கப்படவுள்ளதாக தற்போது அதிகம் பேசப்படுகின்றது.
Selendiva Holdings நிறுவனத்தின் அசையா சொத்து அபிவிருத்தியின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள, காங்கேசன்துறையிலுள்ள சர்வதேச இணைப்பு நிலையம் அமைந்துள்ள 5 ஏக்கர் பகுதி முதலீட்டுக்காக வழங்கப்படவுள்ளதாக அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, தொடர்ந்தும் கடற்படையினரின் வசமுள்ள, கீரிமலையில் நிர்மாணிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை சர்வதேச விருந்தினருக்கான சந்திப்பு நிலையம் எனும் பெயரில் இலங்கை முதலீட்டு சபையின் ஏல விற்பனை மூலம் வழங்கப்படவுள்ளதாக காலைக்கதிர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கீரிமலையில் மக்களின் நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் தொடர்பில் ஒரு மாதத்திற்கு முன்னர் நகர அபிவிருத்தி அதிகார சபை தகவல்களைக் கோரியதாகவும் தம்மிடம் இருந்த தகவல்களை அவர்களுக்கு வழங்கியதாகவும் தெல்லிப்பழை பிரதேச செயலகம் தெரிவித்தது.
வலிகாமம் வடக்கின் பெரும்பகுதி படையினரின் ஆக்கிரமிப்பில் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்தவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் கீரிமலையில் இந்த கட்டடம் அமைக்கப்பட்டது.
J/226 நகுலேஸ்வரம் கிராமசேவகர் பிரிவில் சுமார் 50 ஏக்கர் நிலம் கடற்படையினர் வசமுள்ளபோதிலும் 7 ஏக்கர் நிலத்தில் குறித்த மாளிகை நிர்மாணிக்கப்பட்டதாகவும் காலைக்கதிர் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ். மாநகரத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலும் இந்திய முதலீட்டில் விஸ்தரிக்கப்பட்ட பலாலி விமான நிலையத்திலிருந்து சுமார் 5.5 கிலோமீட்டர் தொலைவிலும் கீரிமலை ஜனாதிபதி மாளிகையின் அமைவிடம் உள்ளது.
மக்களின் நிலத்தில் அடாத்தாக கீரிமலையில் நிர்மாணிக்கப்பட்ட இந்த மாளிகை வெளியாருக்கு கூறுவிலை மூலம் வழங்கப்படவுள்ளமை தொடர்பில் சில தரப்பினர் இன்று அதிருப்தி வெளியிட்டனர்.
16 Jul, 2022 | 05:50 PM
09 Jul, 2022 | 06:52 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS