அதிக டெஸ்ட்களில் விளையாடிய இங்கிலாந்து வீரர்: ஜேம்ஸ் அண்டர்சன் புதிய சாதனை

அதிக டெஸ்ட்களில் விளையாடிய இங்கிலாந்து வீரர்: ஜேம்ஸ் அண்டர்சன் புதிய சாதனை

அதிக டெஸ்ட்களில் விளையாடிய இங்கிலாந்து வீரர்: ஜேம்ஸ் அண்டர்சன் புதிய சாதனை

எழுத்தாளர் Bella Dalima

10 Jun, 2021 | 7:12 pm

Colombo (News 1st) அதிக டெஸ்ட்களில் விளையாடிய இங்கிலாந்து வீரர் என்கிற புதிய சாதனையை வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் நிகழ்த்தியுள்ளார்.

பிர்மிங்ஹமில் இன்று தொடங்கிய நியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் விளையாடும் ஜேம்ஸ் அண்டர்சன், தனது 162 ஆவது டெஸ்டை விளையாடுகிறார்.
இதன்மூலம் அதிக டெஸ்ட்களில் விளையாடிய குக்கின் சாதனையை (161 டெஸ்ட்கள்) முறியடித்துள்ளார்.

2003 இல் லார்ட்ஸ் மைதானத்தில் ஜிம்பாப்வேக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர் அறிமுகமானார். இதுவரை 616 விக்கெட்களுடன் அதிக விக்கெட்கள் எடுத்த வேகப்பந்து வீச்சாளர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.

2008 இல் ஸ்டூவர்ட் பிராடுடன் இணைந்து நியூசிலாந்திற்கு எதிராக இங்கிலாந்து அணி வெற்றி பெற பெரிதும் உதவினார் அண்டர்சன். அந்த டெஸ்டிலிருந்து ஆண்டர்சன் – பிராட் கூட்டணி, டெஸ்டில் முத்திரை பதிக்க ஆரம்பித்தது. முதல் 20 டெஸ்ட்களில் சுமாராக பந்துவீசி வந்த ஆண்டர்சன், பிராடுடன் இணைந்த பிறகு வெற்றிகரமான பந்துவீச்சாளராக மாறினார். 2009-2013 வரை மூன்று ஆஷஸ் வெற்றிகளையும் 2012-13-இல் இந்தியாவில் டெஸ்ட் தொடரையும் வெல்ல இங்கிலாந்து அணிக்கு முக்கியப் பங்களிப்பு செய்தார்.

30 வயதிற்கு முன்பு 71 டெஸ்ட்களில் 268 விக்கெட்களை எடுத்த அண்டர்சன், 30 வயதிற்குப் பிறகு 90 டெஸ்ட்களில் 348 விக்கெட்களை எடுத்துள்ளார். வயது அதிகமாக ஆக, திறமையை அதிகமாக வெளிப்படுத்தி, ஏராளமான விக்கெட்களைக் குவித்து வருகிறார். தற்போது அவருக்கு 39 வயதாகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்