வைத்தியசாலைகளின் கனிஷ்ட ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

வைத்தியசாலைகளின் கனிஷ்ட ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

வைத்தியசாலைகளின் கனிஷ்ட ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

09 Jun, 2021 | 11:47 pm

Colombo (News 1st) வைத்தியசாலைகளின் கனிஷ்ட ஊழியர்கள் இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இன்று (09) காலை 8 மணிக்கு ஆரம்பமான இந்த தொழிற்சங்க நடவடிக்கை நண்பல் 12 மணி வரை முன்னெடுக்கப்பட்டதாக
ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தின் பிரதம செயலாளர் சுகதானந்த தேரர் தெரிவித்தார்.

தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாமை, இடமாற்றம் வழங்கப்படாமை, போக்குவரத்து கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட பிரச்சினைகளை சுட்டிக்காட்டி இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

எனினும், கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை, காசல் வீதி மகளிர் வைத்தியசாலை, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை உள்ளிட்ட சில வைத்தியசாலைகளில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்