தம்பலகாமம் – வடக்கு ஈச்சங்குளம் பகுதியில் யானையொன்றின் உடல் மீட்பு

தம்பலகாமம் – வடக்கு ஈச்சங்குளம் பகுதியில் யானையொன்றின் உடல் மீட்பு

தம்பலகாமம் – வடக்கு ஈச்சங்குளம் பகுதியில் யானையொன்றின் உடல் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

09 Jun, 2021 | 1:21 pm

Colombo (News 1st) திருகோணமலை – கல்மெட்டியாவ, வடக்கு ஈச்சங்குளம் காட்டுப் பகுதியில் யானையொன்று உயிரிழந்த நிலையில் நேற்று (08) மீட்கப்பட்டுள்ளது.

தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மெட்டியாவ – வடக்கு ஈச்சங்குளம் காட்டுப் பகுதியை அண்மித்த பகுதியில் எட்டு அடி உயரமான ஆண் யானையொன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது.

இரண்டரை அடி நீளம் கொண்ட தந்தத்தை உடைய இந்த யானை குறித்த பகுதியில் சில நாட்களாகவே நடமாடியதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு குறித்த யானை, பன்றிக்கு வைத்த வெடிபொருளை உட்கொண்டமையால் உணவு உண்ண முடியாது உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வனஜீவராசி அதிகாரிகளுடன் இணைந்து தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்