சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட மானிய உர மூட்டைகள் பொலிஸாரால் கைப்பற்றல்

சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட மானிய உர மூட்டைகள் பொலிஸாரால் கைப்பற்றல்

சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட மானிய உர மூட்டைகள் பொலிஸாரால் கைப்பற்றல்

எழுத்தாளர் Staff Writer

09 Jun, 2021 | 11:31 pm

Colombo (News 1st)  அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற மானிய உர மூட்டைகள் சட்டவிரோதமாக லொறியொன்றில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டபோது மட்டக்களப்பில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு – தாழங்குடா பகுதியிலிருந்து குருநாகல் நோக்கி கொண்டு செல்லப்பட்ட உர மூட்டைகளே கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட லொறியில் 53 உர மூட்டைகள் காணப்பட்டுள்ளன.

லொறியின் சாரதியும் அதன் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்