கர்ப்பிணி தாய்மாருக்கு இன்று (09) முதல் கொரோனா தடுப்பூசி

கர்ப்பிணி தாய்மாருக்கு இன்று (09) முதல் கொரோனா தடுப்பூசி

கர்ப்பிணி தாய்மாருக்கு இன்று (09) முதல் கொரோனா தடுப்பூசி

எழுத்தாளர் Staff Writer

09 Jun, 2021 | 9:32 am

Colombo (News 1st) கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று (09) ஆரம்பமாகின்றது.

பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை மையமாகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

கர்ப்பிணித் தாய்மாரின் விருப்பத்திற்கேற்ப தடுப்பூசி செலுத்தப்படும் என குடும்ப நல சுகாதார பிரிவு பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகிய கர்ப்பிணித் தாய்மார்கள் பலர், கடந்த சில நாட்களில் உயிரிழந்த நிலையில், கர்ப்பிணி தாய்மார்களுக்கும் தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என சுகாதார அமைச்சு தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்