உயர் நீதிமன்ற நீதியரசராக அர்ஜுன ஒபேசேகரவை நியமிக்க பாராளுமன்ற பேரவை இணக்கம்

உயர் நீதிமன்ற நீதியரசராக அர்ஜுன ஒபேசேகரவை நியமிக்க பாராளுமன்ற பேரவை இணக்கம்

உயர் நீதிமன்ற நீதியரசராக அர்ஜுன ஒபேசேகரவை நியமிக்க பாராளுமன்ற பேரவை இணக்கம்

எழுத்தாளர் Staff Writer

09 Jun, 2021 | 5:27 pm

Colombo (News 1st) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் அர்ஜுன ஒபேசேகரவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்க பாராளுமன்ற பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

இதனைத்தவிர, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கே.பீ. பெர்னாண்டோவை நியமிக்கவும் பாராளுமன்ற பேரவை அனுமதி வழங்கியுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரனை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கவும் உயர் நீதிமன்ற நீதியரசர் T.B. தெஹிதெனியவை நீதிச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கவும் பாராளுமன்ற பேரவை அனுமதி வழங்கியுள்ளது.

சபாநாயகர் தலைமையில் நேற்று (08) மாலை பாராளுமன்ற பேரவை கூடியபோது இந்த இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்