இலங்கைக்கு 6 இலட்சம் AstraZeneca தடுப்பூசிகளை வழங்க ஜப்பான் இணக்கம்

இலங்கைக்கு 6 இலட்சம் AstraZeneca தடுப்பூசிகளை வழங்க ஜப்பான் இணக்கம்

இலங்கைக்கு 6 இலட்சம் AstraZeneca தடுப்பூசிகளை வழங்க ஜப்பான் இணக்கம்

எழுத்தாளர் Staff Writer

09 Jun, 2021 | 10:13 pm

Colombo (News 1st) இலங்கைக்கு 6 இலட்சம் AstraZeneca தடுப்பூசிகளை வழங்க ஜப்பான் இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பூசி கிடைக்கும் பட்சத்தில், முதல் கட்டத்தில் AstraZeneca தடுப்பூசியை ஏற்றிக்கொண்ட 6 இலட்சம் பேருக்கான இரண்டாம் தடுப்பூசியை வழங்குவதற்கான வாய்ப்புக் கிடைக்கும்.

6 இலட்சம் AstraZeneca தடுப்பூசிகளை பெற்றுத்தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, ஜப்பான் பிரதமர் Yoshihide Suga-விடம் முன்வைத்த கோரிக்கைக்கு, சாதகமான பதில் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஜப்பான் பிரதமரின் சாதகமான பதிலை, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் சுகியாமா அகிரா ஜனாதிபதியிடம் இன்று அறிவித்துள்ளார்.

இலங்கைக்கான ஜப்பான் தூதுவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

COVID ஒழிப்பிற்கான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு, சுகாதார மற்றும் மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கைக்கும் ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்