100 நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்திற்கு அனுமதி

100 நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

by Staff Writer 08-06-2021 | 4:19 PM
Colombo (News 1st) நாட்டிலுள்ள நூறு நகரங்களை அழகுபடுத்தும் செயற்றிட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.   அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ள "சியக் நகர" எனும் இந்த திட்டம் நகர அபிவிருத்தி அதிகார சபை ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. நகரங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பில், பிரதமர் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு, இந்த வாரம் கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. முறையற்ற அபிவிருத்தி காரணமாக பிரச்சினைகள் எழும் நகரங்களாகக் காணப்படும் அநேகமான நகரங்கள் புதிய திட்டத்தின் மூலம் மக்கள் வாழ்வதற்கு பொருத்தமான நகரங்களாக மாற்றப்படவுள்ளன. இதனிடையே, பிரதேச செயலக மட்டத்தில் தொழிற்சாலைகளை அமைத்து முதலீட்டு வாய்ப்புக்களை அதிகரிப்பது தொடர்பாக அமைச்சர்களான நாமல் ராஜபக்ஸ மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் கூட்டாக முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.