''மக்கள் நலனுக்காக முன்னோக்கி செல்ல வேண்டும்''

சிக்கல்களை கருத்திற்கொள்ளாது மக்கள் நலனுக்காக முன்னோக்கி செல்ல வேண்டும் - ஜனாதிபதி

by Staff Writer 08-06-2021 | 2:08 PM
Colombo (News 1st) சேதனப் பசளை பயன்பாட்டின் போது எதிர்நோக்கும் சிக்கல்களை கருத்திற்கொள்ளாது மக்களின் நலன்புரி விடயங்களுக்காக பிரதிநிதிகள் முன்னோக்கி செல்ல வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார். தட்டுப்பாட்டை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், அடுத்த போகத்திற்கு தேவையான உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அனைத்து செய்கைகளையும் எவ்வித இடையூறுமின்றி முன்னெடுக்க முடியும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். சேதனப் பசளை பயன்பாட்டை விவசாயத் துறையில் பேணுவதற்கு அரசாங்கத்தினால் ஸ்திரமான தீர்மானம் மேற்கொண்டுள்ள போதும், அது குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகவும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்விற்காக, அரசாங்கத்தின் தீர்மானத்தை அமுல்படுத்த வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். சேதனப் பசளை பயன்பாடு தொடர்பில் விவசாயிகள் உரிய முறையில் தௌிவுபடுத்தப்படாமையாலேயே, அவர்களுக்கு தேவையற்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.