ஐ.நா பொதுச்சபையின் தலைவராக அப்துல்லா ஷாஹிட் தெரிவு

ஐ.நா பொதுச்சபையின் தலைவராக அப்துல்லா ஷாஹிட் தெரிவு

ஐ.நா பொதுச்சபையின் தலைவராக அப்துல்லா ஷாஹிட் தெரிவு

எழுத்தாளர் Staff Writer

08 Jun, 2021 | 10:51 am

Colombo (News 1st) மாலைதீவுகளின் வௌியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹிட், 76 ஆவது ஐ.நா பொதுச்சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

193 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா பொதுச்சபையில் தலைவர் தெரிவுக்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 143 வாக்குகளை பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானின் முன்னாள் வௌியுறவுத்துறை அமைச்சர், டொக்டர் ட்சல்மாலி ரசோல் 48 வாக்குகளை மாத்திரம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தநிலையில், மாலைதீவுகளின் வௌியுறவுத்துறை அமைச்சரின் புதிய நியமனத்திற்கு இந்திய அரசாங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்