விமானப்படையின் பயிற்சி விமானம் அவசரமாக தரையிறக்கம்

விமானப்படையின் பயிற்சி விமானம் அவசரமாக தரையிறக்கம்

விமானப்படையின் பயிற்சி விமானம் அவசரமாக தரையிறக்கம்

எழுத்தாளர் Staff Writer

07 Jun, 2021 | 3:46 pm

Colombo (News 1st) தொழில்நுட்ப கோளாறு காரணமாக இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான Cessna 150 ரக விமானம், திருகோணமலையில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இன்று (07) முற்பகல் 10.20 மணியளவில் சீனன்குடா விமானப்படைத்தளத்தில் இருந்து குறித்த விமானம் புறப்பட்டதாக விமானப்படை பேச்சாளர், க்ரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.

இதன்பின்னர் சுமார் 10.48 மணியளவில் குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் பயணித்த விமானிகள் இருவரும் பாதுகாப்பாக தரையிறங்கியதாக விமானப்படை கூறியுள்ளது.

குறித்த விமானமானது விமானிகளின் முதற்கட்ட பயிற்சிகளுக்காக பயன்படுத்தப்படும் விமானம் என விமானப்படை மேலும் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்