பொலிஸாரால் கைதான சந்தேகநபர் ஒருவர் உயிரிழப்பு

பொலிஸாரால் கைதான சந்தேகநபர் ஒருவர் உயிரிழப்பு; விசாரணை ஆரம்பம்

by Staff Writer 07-06-2021 | 9:55 AM
Colombo (News 1st) பாணந்துறை பகுதியில் பயணக் கட்டுப்பாடுகளை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரை கைது செய்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

ஏனைய செய்திகள்