தனது இரண்டாவது குழந்தைக்கு தாயின் பெயரை சூட்டினார் இளவரசர் ஹரி 

தனது இரண்டாவது குழந்தைக்கு தாயின் பெயரை சூட்டினார் இளவரசர் ஹரி 

தனது இரண்டாவது குழந்தைக்கு தாயின் பெயரை சூட்டினார் இளவரசர் ஹரி 

எழுத்தாளர் Bella Dalima

07 Jun, 2021 | 4:30 pm

Colombo (News 1st)  இளவரசர் ஹரி – மேகன் தம்பதிக்கு இரண்டாவதாக பெண்  குழந்தை பிறந்துள்ளது.
அக்குழந்தைக்கு லிலிபெட் லிலி டயானா மவுன்ட்பேட்டன் வின்ட்சர் ( Lilibet  “Lili” Diana Mountbatten-Windsor) என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் – டயானா தம்பதியின் இரண்டாவது மகன் ஹரி. இவர் அமெரிக்காவை சேர்ந்த மேகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர் சகோதரர் வில்லியம் உடன் இங்கிலாந்து அரச அரண்மனையில் வாழ்ந்து வந்தார்.

அதன்பின் அரச குடும்பத்தின் எந்த அடையாளங்களையும் பயன்படுத்த மாட்டேன் எனக் கூறி மனைவியுடன் அமெரிக்கா சென்றுவிட்டார்.

ஏற்கனவே இந்த தம்பதிக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு எலிசபெத் ராணியின் (ஆர்ச்சி ஹாரிசன் மவுன்ட்பேட்டன் வின்ட்சர்) எனும் பெயரை சூட்டினர்.

இந்த நிலையில், கடந்த 4 ஆம் திகதி  இந்த தம்பதிக்கு கலிபோர்னியாவில் மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த குழந்தைக்கு ஹரி, மறைந்த தனது தாயார் டயானாவின் பெயரை சூட்டியுள்ளார்.

இதில் லிலிபெட் என்பது அரச குடும்பம் மகாராணியை அழைக்கும் பெயராகும.

தாயும் சேயும் நலமாக இருப்பதாக அவர்களுடைய பத்திரிகை செயலாளர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்