T20 அணியின் தலைவராக குசால் பெரேரா நியமனம்

இலங்கை T20 அணியின் தலைவராக குசால் பெரேரா நியமனம்

by Bella Dalima 06-06-2021 | 4:51 PM
Colombo (News 1st) இலங்கையின் T20 அணியின் தலைவராக குசால் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். 30 வயதான குசால் பெரேரா, இலங்கை அணிக்காக 22 டெஸ்ட்கள், 104 ஒரு நாள் போட்டிகள், 47 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இங்கிலாந்தில் 3 ஒரு நாள் போட்டிகளிலும் 3 T20 போட்டிகளிலும் இலங்கை அணி விளையாடவுள்ளது. இதற்கான இலங்கை T20 அணியின் தலைவராக குசால் பெரேரா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடர் ஜூன் 23 ஆம் திகதியும் T20 தொடர் ஜூன் 29 ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.