விவசாய அமைச்சின் செயலாளர் இராஜினாமா

விவசாய அமைச்சின் செயலாளர் இராஜினாமா

விவசாய அமைச்சின் செயலாளர் இராஜினாமா

எழுத்தாளர் Staff Writer

06 Jun, 2021 | 1:40 pm

Colombo (News 1st) விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹன புஷ்பகுமார இராஜினாமா செய்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

தம்மை சந்தித்த அமைச்சின் செயலாளர், தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்ததாகவும் அமைச்சர் கூறினார்.

இதற்கமைய, விவசாய அமைச்சின் செயலாளராக வயம்ப பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை நியமிக்கவுள்ளதாக  அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் சேதனப்பசளை தொடர்பிலான நிபுணத்துவ தேர்ச்சியுள்ளவர்கள் அமைச்சுக்கு தேவைப்படுவதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்