9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

by Staff Writer 05-06-2021 | 10:30 PM
Colombo (News 1st) சீரற்ற வானிலையால் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, பாலிந்தநுவர, புலத்சிங்கள, அஹலவத்த, மற்றும் மத்துகம பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான மற்றும் எஹலியகொட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் சிவப்பு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேச செயலாளர் பிரிவிற்கும், காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேச செயலாளர் பிரிவிற்கும் களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட மற்றும் ஹொரணை பிரதேச செயலாளர் பிரிவிற்கும் மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், கேகாலை மாவட்டத்தின் கலிகமுவ, மாவனெல்ல, கேகாலை, யட்டியாந்தோட்ட, ருவன்வெல்ல, தெரணியகல, புலத்கொஹூப்பிட்டிய, தெஹியோவிட்ட, அரநாயக்க மற்றும் வரக்காபொல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மஞ்சள் நிற இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம பிரதேச செயலாளர் பிரிவிற்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. இதனைத் தவிர, கண்டி மாவட்டத்தின் தும்பனே, உடுநுவர மற்றும் யட்டிநுவர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மாத்தளை மாவட்டத்தின் அம்பன்கங்க கோரளை, பல்லேபொல, யட்டவத்த ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, கிரியெல்ல, நிவித்திகல, இரத்தினபுரி மற்றும் எலபாத்த ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.