6 அரச நிறுவனங்கள் நாமல் ராஜபக்ஸவின் இராஜாங்க அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன

6 அரச நிறுவனங்கள் நாமல் ராஜபக்ஸவின் இராஜாங்க அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன

6 அரச நிறுவனங்கள் நாமல் ராஜபக்ஸவின் இராஜாங்க அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன

எழுத்தாளர் Staff Writer

05 Jun, 2021 | 10:42 pm

Colombo (News 1st) இலங்கை கட்டளைகள் நிறுவனம் உள்ளிட்ட 06 அரச நிறுவனங்கள், நாமல் ராஜபக்ஸவின் கீழுள்ள டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதற்கமைய, கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம், தேசிய விஞ்ஞான தொழில்நுட்பவியல் ஆணைக்குழு மற்றும் அனைத்து தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் என்பன டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,  Sri Lanka Institute of Nanotechnology Pvt Ltd நிறுவனமும் நாமல் ராஜபக்ஸவின் புதிய இராஜாங்க அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல்
ஆணைக்குழு மற்றும் இணைந்த நிறுவனங்கள், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவராண்மை மற்றும் இணைந்த நிறுவனங்கள், இலங்கை கணினி திடீர் பதிலளித்தல் ஒன்றியம், ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் மற்றும் அதன் நிர்வாக
மற்றும் இணை நிறுவனங்கள், ஆட்பதிவுத் திணைக்களம் என்பனவும் நாமல் ராஜபக்ஸவின் புதிய இராஜாங்க அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்