மருந்துகளை தபால் மூலம் அனுப்ப தீர்மானம்

மருந்துகளை தபால் மூலம் அனுப்ப  யாழ். போதனா வைத்தியசாலை தீர்மானம்

by Staff Writer 05-06-2021 | 5:28 PM
Colombo (News 1st) யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் கிளினிக் நோயாளர்களுக்கான மருந்துகளை தபால் மூலம் அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போதைய கொரோனா தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார். இதற்கமைய, இன்று முதல் நோயாளிகளுக்கான மருந்துப் பொருட்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுமென அவர் கூறியுள்ளார். எனவே, நோயாளர்கள் தமக்கு தேவையான மருந்துகளை 021 221 4249 அல்லது 021 222 2261 அல்லது 021 222 3348 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி தபால் மூலம் பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கிளினிக் முறையில் வைத்திய சேவையை பெறுவோர், மேற்கூறப்பட்ட தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி தத்தமது விபரங்களை பதிவு செய்யுமாறு யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் எஸ்.ஶ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.