பலத்த மழையுடனான வானிலையால் 06 பேர் உயிரிழப்பு

பலத்த மழையுடனான வானிலையால் 06 பேர் உயிரிழப்பு

by Staff Writer 05-06-2021 | 5:43 PM
Colombo (News 1st) பலத்த மழையுடனான வானிலையால் இதுவரை  06 பேர் உயிரிழந்துள்ளர். 5 பேர் காணாமற்போயுள்ளனர். 7 மாவட்டங்களை சேர்ந்த 183,028 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 5,375 பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டது. மாவனெல்ல – தெவனகல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன நால்வரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் (56), தந்தை (57), மகள் (23), மகன் (29) ஆகியோரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, வரக்காப்பொல அல்கமகந்த மண்சரிவில் சிக்கி 72 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். மண்சரிவு ஏற்பட்ட போது குறித்த வீட்டில் 6 பேர் இருந்துள்ளனர். இந்நிலையில், களனி கங்கையின் சீதாவக்க, கடுவளை, பியகம, கொலன்னாவ, களனி,கொழும்பை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள வௌ்ள நிலைமை, மேலும் அதிகரிக்கக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதனால் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என திணைக்களம் அறிவுத்தியுள்ளது. இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் கேகாலை அல்கம பகுதியில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. 197.5 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி இங்கு பதிவாகியுள்ளது. மொரலிய ஓயவில் 188.2 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சியும் , வொகன்வதுயாய வில் 165.4 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் நீர்கொழும்பில் 156.2 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. கடும் மழை காரணமாக நாட்டின் பல பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.