களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரிக்கக்கூடும்

களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரிக்கக்கூடும்:  நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை

by Bella Dalima 05-06-2021 | 5:16 PM
Colombo (News 1st) களனி கங்கையில் ஏற்பட்டுள்ள வௌ்ள நிலைமை எதிர்வரும் 6 முதல் 18 மணித்தியாலங்களுக்குள் அதிகரிக்கக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் சீதாவக்க, கடுவளை, பியகம, கொலன்னாவ, களனி, கொழும்பு ​ஆகிய பகுதிகளை அண்மித்த இடங்களில் ஏற்பட்டுள்ள வௌ்ள நிலைமை மேலும் அதிகரிக்கக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. களனி கங்கையை அண்மித்த பகுதிகளில் 120 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியதாக நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, பலத்த மழை காரணமாக 82,000 மின் பாவனையாளர்களுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில், விசேட குழுக்கள் செயற்பட்டு வருவதாக மின்சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.