கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கும் அமெரிக்கா

இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு 7 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை வழங்கவுள்ளது அமெரிக்கா

by Bella Dalima 05-06-2021 | 12:25 AM
Colombo (News 1st) இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு 7 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது. உலக நாடுகளுக்கு 80 மில்லியன் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கும் திட்டம் மூலம் இந்த தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் இந்த திட்டத்தினூடாக இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்கா இதுவரை மெக்சிக்கோ, கனடா ஆகிய நாடுகளுக்கு 4 மில்லியன் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.