மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க தைரியமான கொள்கைகளை பின்பற்ற தயங்கக்கூடாது: ஐ.நா உலக உணவு பாதுகாப்பு மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Jun, 2021 | 10:07 pm

Colombo (News 1st) மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தைரியமான கொள்கைகளை பின்பற்ற உலகெங்கிலும் உள்ள நாடுகள் தயங்கக்கூடாது என்று ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற உலக உணவு பாதுகாப்பு தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் 48 ஆவது அமர்வில் வீடியோ தொழில்நுட்பம் மூலம் ஜனாதிபதி உரையாற்றினார்.

இலங்கை இரசாயன உர பயன்பாட்டை நிறுத்துவதற்கு எடுத்த தீர்மானத்தை உலக சுகாதார ஸ்தாபனம் இதன்போது பாராட்டியுள்ளதுடன், அதனை கௌரவிக்கும் வகையில் வருடாந்தம் நடைபெறும் தமது மாநாட்டில் விசேட உரையாற்றுவதற்கு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்