குடிநீர் விநியோகத்தில் சிக்கல் இல்லை – வாசுதேவ நாணாயக்கார

குடிநீர் விநியோகத்தில் சிக்கல் இல்லை – வாசுதேவ நாணாயக்கார

குடிநீர் விநியோகத்தில் சிக்கல் இல்லை – வாசுதேவ நாணாயக்கார

எழுத்தாளர் Staff Writer

05 Jun, 2021 | 2:51 pm

Colombo (News 1st) சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கசிந்த எண்ணெய், களனி கங்கையில் கலந்துள்ள போதிலும் சுத்தமான குடிநீரை விநியோகிப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார தெரிவித்துள்ளார்.

அம்பதலே மற்றும் பியகம நீர் சுத்திரிகரிப்பு நிலையங்களுக்கு களனி கங்கையிலிருந்து பெறப்படும் நீர் முழுமையாக பரிசோதிக்கப்பட்டதன் பின்னரே நீர் விநியோக செயற்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்

களனி கங்கையிலிருந்து சுத்திகரிப்பு நிலையங்களிலுள்ள நீர் களஞ்சிய தொட்டில்களுக்கு பெறப்பட்டதன் பின்னரும் இரசாயன கூறுகள் தொடர்பில் விஞ்ஞான ரீதியிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

அதன் பின்னரே நீர் சுத்திகரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுவதாக நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்