கொழும்பில் டெங்கு பரவும் அபாயம்

கொழும்பில் டெங்கு பரவும் அபாயம்

கொழும்பில் டெங்கு பரவும் அபாயம்

எழுத்தாளர் Bella Dalima

04 Jun, 2021 | 11:50 pm

Colombo (News 1st) மழையுடன் கூடிய வானிலையால் நாட்டில் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் அபாய நிலைமை ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 7,860 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மே மாதத்தில் 859 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

டெங்கு, COVID இரண்டுமே வைரஸ் நோய்கள் என்பதால், இரண்டிற்குமான அறிகுறிகள் ஓரளவு ஒத்திருக்கும்.

எனவே, காய்ச்சல், உடல் வலி, தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுமாறு டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் அருண ஜயசேகர கேட்டுக்கொண்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்