இராஜாங்க அமைச்சராக நாமல் ராஜபக்ஸ பதவிப்பிரமாணம்

டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நாமல் ராஜபக்ஸ பதவிப்பிரமாணம்

by Bella Dalima 03-06-2021 | 3:34 PM
Colombo (News 1st) டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நாமல் ராஜபக்ஸ இன்று (03) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அவர் தற்போது இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்குத் தெரிவான நாமல் ராஜபக்ஸ 2015 ஆம் ஆண்டு வரை ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினராகக் கடமையாற்றினார். 2015 ஆம் ஆ​ண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட நாமல் ராஜபக்ஸ, 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டார்.