பல வெற்றிப் படங்களை இயக்கிய ஜி.என்.ரங்கராஜன் காலமானார்

பல வெற்றிப் படங்களை இயக்கிய ஜி.என்.ரங்கராஜன் காலமானார்

பல வெற்றிப் படங்களை இயக்கிய ஜி.என்.ரங்கராஜன் காலமானார்

எழுத்தாளர் Bella Dalima

03 Jun, 2021 | 3:51 pm

Colombo (News 1st) மீண்டும் கோகிலா, எல்லாம் இன்பமயம்,கல்யாணராமன் உட்பட பல வெற்றிப் படங்களை இயக்கிய ஜி.என்.ரங்கராஜன் காலமானார்.

கமல் ஹாசன் நடிப்பில் வெளியான மீண்டும் கோகிலா, எல்லாம் இன்பமயம், கல்யாணராமன், ‘கடல் மீன்கள், மகராசன் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் ஜி.என்.ரங்கராஜன்.

இது தவிர முத்து எங்கள் சொத்து, அடுத்தாத்து ஆல்பர்ட், மனக்கணக்கு, பல்லவி மீண்டும் பல்லவி போன்ற படங்களையும் இயக்கியுள்ளார்.

இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக ஜி.என்.ரங்கராஜன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 90.

ஜி.என்.ரங்கராஜன் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவர் நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலனின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்