சுகாதார ஊழியர்கள் 4 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு

சுகாதார ஊழியர்கள் 4 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு

சுகாதார ஊழியர்கள் 4 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Jun, 2021 | 10:15 pm

Colombo (News 1st) சுகாதார ஊழியர்கள் இன்று முற்பகல் 4 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

தமது கோரிக்கைகளுக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லையென தெரிவித்து இவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதனால் பயணத் தடைக்கு மத்தியிலும் வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையிலும் சுகாதாரப் பணியாளர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

யாழ். போதனா வைத்தியசாலையின் சுகாதாரப் பணியாளர்களும் 9 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்

 

வவுனியா பொது வைத்தியசாலையிலும் சுகாதாரப் பணியாளர்களினால் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் தாதியர் சுகாதார தொழிற்சங்கத்தினர் ஒன்றிணைந்து 14 அம்சக் கோரிக்கையை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தாதி உத்தியோகத்தர்கள் பதாகைகளை ஏந்தியவாறு அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு போதனா வைத்திசாலையின் சுகாதாரப் பணியாளர்களும் சாத்வீகமான முறையில் தமது எதிர்ப்பினை வௌிப்படுத்தினர்.

மட்டக்களப்பு – ஏறாவூர் ஆதார வைத்தியசாலை, களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை தாதியர்களும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

அம்பாறை – நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் தாதி உத்தியோகத்தர்களும் ஏனைய ஊழியர்களும் ஒரு மணி நேரம் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்