by Staff Writer 02-06-2021 | 1:45 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 1,038 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தளையிலேயே பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் மாத்தளையில் 156 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 20,140 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
ட்ரோன் கெமராக்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளுப்பிட்டி, முல்லேரியா உள்ளிட்ட பகுதிகளை கேந்திரமாக கொண்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை, தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி பயணித்த 17 வாகனங்கள் 24 மணித்தியாலங்களுள் கைப்பற்றப்பட்டுள்ளன.