இளையராஜா, மணிரத்னம் பிறந்தநாள்: குவியும் வாழ்த்துகள்

இளையராஜா, மணிரத்னம் பிறந்தநாள்: குவியும் வாழ்த்துகள்

இளையராஜா, மணிரத்னம் பிறந்தநாள்: குவியும் வாழ்த்துகள்

எழுத்தாளர் Bella Dalima

02 Jun, 2021 | 4:57 pm

Colombo (News 1st) இசையமைப்பாளர் இளையராஜாவின் 73 ஆவது பிறந்த நாளையொட்டி அவருக்கு உலக அளவில் உள்ள அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இளையராஜாவின் பாடல்கள் காலத்தை வென்று எல்லா தலைமுறையினராலும் ரசிக்கப்படும் வேளையில், தங்களுக்குப் பிடித்த இளையராஜாவின் பாடல்களை சமூக ஊடக தளங்களில் பகிர்ந்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

1943 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் திகதி தேனியில் உள்ள பண்ணையபுரத்தில் பிறந்தவர் இளையராஜா. இவரது இயற்பெயர் ஞானதேசிகன். ஆனால், பள்ளியில் சேரும்போது இவரது பெயரை ராஜய்யா என்று இவரது பெற்றோர் மாற்றினர். இருப்பினும், இவரது கிராமத்தினர் இவரை செல்லமாக ராசய்யா என்று அழைப்பார்கள்.

இவர் இசையமைத்த முதல் படம் அன்னக்கிளி. அப்போது படத்தின் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் ராஜய்யாவின் பெயருக்கு முன்னால் இளைய என்ற அடைமொழியை சேர்த்து இளையராஜா என்று அழைத்தார். காரணம், 1970-களில் ஏ.எம். ராஜா என்ற பெயரில் வேறொரு இசையமைப்பாளர் இருந்தார்.

இளையராஜாவின் மனைவி பெயர் ஜீவா. இந்த தம்பதிக்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, பவதாரிணி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். 2011ஆம் ஆண்டு இளையராஜாவின் மனைவி ஜீவா இறந்து விட்டார். இவரது சகோதரர் கங்கை அமரனும் இசையமைப்பாளர்.

இதேவேளை, தமிழ் மற்றும் பாலிவுட் உலகில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னத்திற்கும் இன்றுதான் பிறந்த நாள்.

65 வயதாகும் மணிரத்னம் பகல் நிலவு (1985) நாயகன் (1995), தளபதி (1991), திருடா திருடா (1993) ரோஜா (1992), பாம்பே (1995), இருவர் (1997), அலைபாயுதே (2000), ஆயுத எழுத்து (2004), ராவணன் (2010), ஓ காதல் கண்மணி (2015), செக்கச்சிவந்த வானம் (2018), புத்தம் புது காலை (2020) உள்பட 29 படங்களை இயக்கியிருக்கிறார்.

இவரது பொன்னியின் செல்வன் படம் அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

1955 ஆம் ஆண்டில் எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய நாவலைத் தழுவிய மணிரத்னத்தின் இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

இந்த படம் தமிழ் திரைப்பட ரசிகர்கள் இடையே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், மணிரத்னத்தின் பிறந்த நாளையொட்டி அவரது ரசிகர்கள், மணிரத்னம் மற்றும் பொன்னியின் செல்வன் பெயரை #HBDManiRatnam மற்றும் #PonniyinSelvan என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்