மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல் 

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல் 

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல் 

எழுத்தாளர் Staff Writer

31 May, 2021 | 11:12 am

Colombo (News 1st) நீர்கொழும்பு – மாஓயாவில் இருந்து பாணந்துறை வரை தடை செய்யப்பட்டுள்ள பகுதி தவிர்ந்த ஏனைய கடற்பகுதியில் நாளை (01) முதல் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

நீர்கொழும்பு களப்பு  பகுதியில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.

X-Press Pearl கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலைத் தொடர்ந்து கடலில் இரசாயனம் கலந்துள்ளதால், சில கடற்பிராந்தியங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

கப்பலில் இருந்த கொள்கலன்களில் இருந்து வௌியேறிய இரசாயனம் மற்றும் கழிவுகள் கலந்திருக்கக்கூடும் என அனுமானிக்கப்பட்ட கடற்பகுதிகளுக்கே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்