நடிகை பியூமி ஹன்சமாலியும் சந்திமால் ஜயசிங்கவும் கைதாகி பிணையில் விடுவிப்பு

நடிகை பியூமி ஹன்சமாலியும் சந்திமால் ஜயசிங்கவும் கைதாகி பிணையில் விடுவிப்பு

நடிகை பியூமி ஹன்சமாலியும் சந்திமால் ஜயசிங்கவும் கைதாகி பிணையில் விடுவிப்பு

எழுத்தாளர் Staff Writer

31 May, 2021 | 11:15 pm

Colombo (News st) தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் வகையில் பிறந்தநாள் விருந்துபசாரம் நடத்தியதற்காக நடிகை பியூமி ஹன்சமாலியும் அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்கவும்  இன்று கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இருவரும் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டனர்.

விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட ஏனைய 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர்  அஜித் ரோஹன தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்