கப்பலின் கெப்டனிடம் CID விசாரணை

தீப்பற்றிய  MV X-Press Pearl கப்பலின் கெப்டனிடம் CID விசாரணை 

by Staff Writer 31-05-2021 | 11:49 PM
Colombo (News 1st) இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய  MV X-Press Pearl கப்பலின் கெப்டன் உள்ளிட்டவர்களிடம் இன்றும் விசாரணை நடத்தப்பட்டது. கொழும்பு துறைமுகத்திற்கு வெளியில் தீப்பிடித்த கப்பலின் கெப்டன், தலைமை பொறியியலாளர் மற்றும் பிரதி பொறியியலாளரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்றும் விசாரணை நடத்தினர். குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நேற்று பிற்பகலில் MV X-Press Pearl கப்பலின் கெப்டனிடம் வாக்குமூலம் பெறுவதற்கு சென்றிருந்த போதிலும், அப்போது அவரிடம் சில ஆவணங்கள் இருக்காததால், மீண்டும் இன்று வாக்குமூலம் பெற வேண்டியேற்பட்டது. குறித்த கெப்டென் உள்ளிட்ட கப்பலின் பணியாளர்கள் சிலர் வெள்ளவத்தையிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ஏனைய செய்திகள்