by Staff Writer 30-05-2021 | 9:55 PM
Colombo (News 1st) முதலாவது AstraZeneca தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களின் உடலில் COVID - 19 வைரஸூக்கு எதிரான செயற்றிறன் 06 மாதங்களுக்கு நீடிக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டு 08 அல்லது 12 வாரங்களில் இரண்டாவது தடுப்பூசி ஏற்றப்பட வேண்டுமென முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், இந்த காலப்பகுதி நிறைவடைந்ததும் மீண்டும் முழுமையாக தடுப்பூசி ஏற்ற வேண்டிய தேவை இல்லையென உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.