தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு சிக்கலாக மாறியுள்ளது

கொரோனா தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு பெரும் சிக்கலாக மாறியுள்ளது - சஜித் பிரேமதாச

by Staff Writer 30-05-2021 | 10:06 PM
  Colombo (News 1st) இலங்கையில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு பெரும் சிக்கலாக மாறியுள்ளதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். உரிய நேரத்தில் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது, நிதி ஒதுக்கீடு, மனிதவள பயிற்சி, தடுப்பூசி விநியோகம், திட்டமிடல் மற்றும் முன்னுரிமை அடிப்படை உள்ளிட்ட விடயங்களில் ஆரம்பம் முதலே அரசாங்கத்திடம் முறையான திட்டம் இருக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு தேவையான தடுப்பூசிகளுக்கான முன்பதிவை மேற்கொள்ளுமாறு சில மாதங்களுக்கு முன்னரே பல சந்தர்ப்பங்களில் அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சி வலியுறுத்தியிருந்த போதிலும், அவையனைத்தையும் அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் புறந்தள்ளியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மக்களின் உயிரை “விசேடம் மற்றும் விசேடமற்ற” எனும் அடிப்படையில் வகைப்படுத்த வேண்டாம் என அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.