மேலும் ஒரு தொகை Sinopharm தடுப்பூசிகள் நாட்டிற்கு

அடுத்த மாதமளவில் மேலும் 20 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள்

by Staff Writer 30-05-2021 | 10:48 AM
Colombo (News 1st) சீனாவின்  20 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் அடுத்த மாதம் நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக ஔடதங்கள் தயாரிப்பு , விநியோக மற்றும் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். முதற்கட்டமாக ஜூன் மாதம் 6 ஆம் திகதியளவில் 10 இலட்சம் Sinopharm தடுப்பூசிகளை நாட்டிற்கு வழங்க முடியும் என சீனா தெரிவித்துள்ளதாக அவர் கூறினார். அதனையடுத்து இரண்டு வாரங்களின் பின்னர் மீதமுள்ள 10 இலட்சம் தடுப்பூசிகளும் நாட்டிற்கு கிடைக்கவுள்ளன. இதனிடையே ரஷ்யாவின் Sputnik V தடுப்பூசியும் நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர், சன்ன ஜயசுமன மேலும் கூறினார்.

ஏனைய செய்திகள்