மாத்தறையில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை கண்காணித்த பிரதமர் 

மாத்தறையில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை கண்காணித்த பிரதமர் 

மாத்தறையில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை கண்காணித்த பிரதமர் 

எழுத்தாளர் Staff Writer

30 May, 2021 | 9:09 pm

Colombo (News 1st) மாத்தறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் COVID தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை இன்று முற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கண்காணித்தார்.

மாத்தறை – வெள்ளமடம மஹிந்த ராஜபக்ஸ வித்தியாலயத்திற்கு இன்று முற்பகல் பிரதமர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

மக்களுக்கான தடுப்பூசி ஏற்றும் திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் என பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.

மேலும், மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அரச அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள், சுகாதாரத்துறை சாராத அத்தியாவசிய சேவைகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்களுக்கு இங்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்