பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு

பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு

பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு

எழுத்தாளர் Staff Writer

30 May, 2021 | 10:32 am

Colombo (News 1st) பொருளாதார மத்திய நிலையங்கள் இன்றும் (30) நாளையும் (31)  திறக்கப்பட்டிருக்கும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மொத்த வியாபாரத்திற்காக மாத்திரமே மத்திய நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அனுமதிப்பத்திரம் அல்லது அனுமதி பெற்ற நடமாடும் வாகன உரிமைாளர்கள், மத்திய நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்து, அவற்றை வீடுகளுக்கு விற்பனை செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த வர்த்தகர்கள் பிரதேச செயலகத்தினூடாக அனுமதி பெற்றிருத்தல் அவசியமாகும்.

இதேவேளை, நாளை முதல் நாட்டிலுள்ள அனைத்து சதொச நிறுவனங்களும் திறக்கப்படவுள்ளன.

எனினும் சில்லறை விற்பனை இடம்பெற மாட்டாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரதேச செயலாளர், அரச நிறுவனங்கள் மற்றும் நடமாடும் பொருள் விற்பனையாளர்களுக்காக மாத்திரம் சதொச நிறுவனம் திறக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்