தீப்பற்றிய கப்பலினால் கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழப்பு

தீப்பற்றிய கப்பலினால் கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழப்பு

தீப்பற்றிய கப்பலினால் கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

30 May, 2021 | 3:36 pm

Colombo (News 1st) தீப்பற்றிய கப்பலின் இரசாயன பொருட்கள் காரணமாக கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த மீன்களின் பாகங்களை நாரா நிறுவனம் தொடர்ந்தும் பரிசோதித்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நச்சுப்பொருட்கள் காரணமாக அவை உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட ஆய்வில் தெரியவருவதாகவும் சுற்றாடல் அமைச்சர் கூறியுள்ளார்.

X-PRESS PEARL கப்பலின் இரசாயன பொருட்களால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்