கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய அதிகளவானோர் கைது

கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய அதிகளவானோர் கைது

கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய அதிகளவானோர் கைது

எழுத்தாளர் Staff Writer

30 May, 2021 | 10:58 am

Colombo (News 1st) தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 914 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 14 மாதங்களில் நேற்றைய தினமே (29) பெருமளனவானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று கைது செய்யப்பட்டோரில் 101 பேர் மாத்தளை மாவட்டத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் நாடளாவிய ரீதியில் இதற்கான விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தக் காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 17,300 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

தற்போது பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், அனைவரையும் வீடுகளிலேயே இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர, பயணக் கட்டுப்பாட்டை மீறி பயணித்த 20 முச்சக்கரவண்டிகள் மேல் மாகாணத்தில் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்