அடுத்த மாதமளவில் மேலும் 20 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள்

அடுத்த மாதமளவில் மேலும் 20 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள்

அடுத்த மாதமளவில் மேலும் 20 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள்

எழுத்தாளர் Staff Writer

30 May, 2021 | 10:48 am

Colombo (News 1st) சீனாவின்  20 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் அடுத்த மாதம் நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக ஔடதங்கள் தயாரிப்பு , விநியோக மற்றும் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

முதற்கட்டமாக ஜூன் மாதம் 6 ஆம் திகதியளவில் 10 இலட்சம் Sinopharm தடுப்பூசிகளை நாட்டிற்கு வழங்க முடியும் என சீனா தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

அதனையடுத்து இரண்டு வாரங்களின் பின்னர் மீதமுள்ள 10 இலட்சம் தடுப்பூசிகளும் நாட்டிற்கு கிடைக்கவுள்ளன.

இதனிடையே ரஷ்யாவின் Sputnik V தடுப்பூசியும் நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர், சன்ன ஜயசுமன மேலும் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்